எம்மைப்பற்றி

30 ஆண்டு கால விடுதலைப்போராட்டத்தினால் புலம்பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர்களில் ஒருபகுதியினர் நோர்வேத் தமிழர்கள். அதியுயர் விலைகொடுத்து நடாத்தப்பட்ட விடுதலைப்போர் 2009 ம் ஆண்டு முடிவிற்கு வந்த பின்பும் யுத்தத்தின் வடுக்கள் ஈழத்தமிழர்களை துன்புறுத்திக் கொண்டேயிருக்கிறன. தாயகத்தில் அனைத்தையும் இழந்து வாழ்வாதாரத்திற்கு ஏங்கும் மக்கள், முன்நாள் போராளிகள் விதவைகள், பெற்றோரை இழந்த குழந்தைகள், வேலையற்ற பட்டதாரிகள் இவ்வாறாக சொல்லியடங்கா சவால்கள் நிரம்பியுள்ளன.

தமிழ்மக்களுடைய துயரங்களை ஓரளவேனும் தாங்கும் வலு புலம்பெயர் தமிழர்களிடம் இருப்பினும் 2009 இற்கு பின்பு நிலவும் சூழல் நம்பிக்கையீனம் நிறைந்ததாகவே காணப்படுகின்றது. புலம்பெயர் தமிழர்களிடம் இருக்கின்ற வளங்களை ஒருங்கிணைத்து வெளிப்படைத் தன்மையுடன் தாயக உறவுகளிடம் கொண்டு சென்று சேர்ப்பதனூடாக அவர்களை நிவாரணங்களில் தங்கியிராது சொந்தக் காலில் நிற்கும் மக்களாக வளர்த்துக்கொள்ள உதவுவதே தமிழ் – நோர்வே வள ஒன்றியத்தின் நோக்கமாகும்.

நோர்வே வாழ் தமிழ் மக்களில் கணிசமான பகுதியினர் கால் நூற்றாண்டிற்கும் மேலாக இங்கு வாழ்ந்துள்ளனர். உழைக்கும் சக்தியாக இந்நாட்டை வந்தடைந்த நாம் பனியென்றும், குளிரென்றும் பாராது இரவு பகலாக உழைத்து ஒரு காத்திரமான இரண்டாம் தலைமுறையினரை இங்கு உருவாக்கியுள்ளோம். ஆனால் அதற்காக நாம் கொடுத்துள்ள விலை மிக அதிகமோ என எண்ணத்தோன்றும் அளவிற்கு எம்மில் பலர் உடல்நலம், மனநலம் குன்றி அவதிப்படுவது இங்கு வளமையாகிவிட்டது.

இங்குள்ள ஈழத்தமிழர்களது நலவாழ்வையும்,  உரிமைகளையும் உறுதிசெய்வதும்- இரண்டாம் தலைமுறையினரை அதில் அக்கறை கொண்டு பங்குபெறச்செய்வதையும் தமிழ் – நோர்வே வள ஒன்றியம் நோக்கமாக கொண்டுள்ளது.

நீங்களும் திட்டங்களில் பங்காளராக விரும்புகின்றீர்களா
electricity 1

மயிலந்தனை கிராம அபிவிருத்திப்பணிகள் - பாலர் பாடசாலைக்கான மின்சார இணைப்பு

தமிழ்-நோர்வே வள ஒன்றியத்தின் மாதிரிக்கிராமத்திட்டத்தின் கீழ் மயிலந்தனை கிராம அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

முழுமையாக வாசிக்க ...
Mayilanthanai

TNRA மாதிரிக்கிராமத் திட்டத்தின் கீழ் மயிலந்தனை கிராம அபிவிருத்திப்பணிகள்

தமிழ்-நோர்வே வள ஒன்றியத்தின் மாதிரிக்கிராமத்திட்டத்தின் கீழ் மயிலந்தனை கிராம அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

முழுமையாக வாசிக்க ...
helseParis1

பாரிசில் மருத்துவக்கருத்தரங்கு - Dr. லிமலநாதன்

வைகாசித் திங்கள் 20ம் நாள் (2018) பாரீஸ் மாநகரில் என் பள்ளித் தோழர்-தோழியருடன் ஒரு மகிழ்ச்சியான மீழிணைவு நிகழ்ந்து முடிந்தது.

முழுமையாக வாசிக்க ...
Health camp for Tamils in Oslo

Health camp for Tamils in Oslo

Tamil – Norwegian Resource Association has conducted health camp for Oslo tamils on 28.04.2018.

முழுமையாக வாசிக்க ...
Health camp florø

Health seminar for tamils in Florø

TNRA medicalunit have held a health seminar for tamils in Florø. Florø is the most western city of Norway.

முழுமையாக வாசிக்க ...
Drammen health 1

TNRA மருத்துவக்கருத்தரங்கும் உயிர்காப்புப் பயிற்சியும்

தமிழ்-நோர்வே வள ஒன்றியத்தின் மருத்துவப்பிரிவினரால் Drammen தமிழ்மக்களுக்கான மருத்துவக்கருத்தரங்கும் உயிர்காப்புப் பயிற்சியும் 16.04.2018 நடாத்தப்பட

முழுமையாக வாசிக்க ...