மயிலந்தனை கிராம மக்களுடனான சந்திப்பு

மயிலந்தனை கிராம மக்களுடனான சந்திப்பு

மயிலந்தனை கிராமத்தில் அஹிம்சா சமூக நிறுவனத்தின் உதவியுடன் அக்கிராம மக்களினால் தெரிவுசெய்யப்பட்ட ஒரு செயற்பாட்டுக்குழு ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்தது. அந்தச் செயற்குழுவின் ஏற்பாட்டில் அக்கிராம மக்கள் தமிழ் நோர்வே வள ஒன்றிய நிர்வாக உறுப்பினர்களை மகிழ்ச்சியுடனும், பலத்த எதிர்பார்ப்புடனும் வரவேற்றார்கள். கிராம மக்களுடனான கலந்துரையாடலைத் தொடர்ந்து, செயற்குழுவின் பரிந்துரையின் பேரில் கிராம அபிவிருத்தியை முன்னிறுத்தி பின்வரும் உடன்பாடுகள் எட்டப்பட்டன.

கிராம அபிவிருத்தியில் செயற்குழு முன்னின்று கிராம மக்களை அணிதிரட்டி செயற்படும். தமிழ் நோர்வே வள ஒன்றியம் பொருளாதார உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்குவார்கள். அஹிம்சா சமூக நிறுவனத்தினர் மேற்பார்வை மற்றும் வேலைகளை கண்காணிப்பதுடன், தொடர்பாளர்களாகவும், நடைமுறை சிக்கல்களை தீர்த்துவைப்பதிலும் உதவியாகவிருப்பர்.

செயற்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட வேலைத்திட்டங்கள்:                                        

1. போசாக்கின்மையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகள்:

குழந்தைகளுக்கு சத்துணவு வழங்குவதற்கு பதிலாக அக்குழந்தைகளின் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்குவதனூடாக நிலையானதும், உறுதியானதுமான எதிர்காலத்துக்கு வழிவகுத்தல்.

கோழிவளர்ப்பு:     
கோழிக்குடு அமைப்பதற்கான பணஉதவி
கோழிக்குஞ்சுகள் வேண்டுவதற்கான பணஉதவி    

2. போரினால் பெருமளவு பாதிக்கப்பட்டு வாழ்வாதாரமற்று வாடும் குடும்பங்களுக்கான ஆடுவளர்ப்பு உதவி.

கோழிக்குடு அமைப்பதற்கான பணஉதவி: புரட்டாதி மாதம் வழங்கப்பட்டது
கோழிக்குஞ்சுகள் மற்றும் ஆடுகள் வேண்டுவதற்கான பண உதவி: ஐப்பசி மாதம் வழங்கப்பட்டது

3. குடிநீர் மற்றும் விவசாயத்திற்கான நீர்ப்பாசனம்:

முதற்கட்டமாக நீர்வளம் கொண்ட பொதுக்கிணறு அமைத்தல்
மாரிகாலம் முடிவடைந்ததும் கிணறுவெட்டும் வேலைகளை ஆரம்பித்தல்
கிணற்றை சுற்றியுள்ள விளைநிலங்களில் விவசாயத்தை ஆரம்பித்தல் 
ஒருவருட காலம் கிணற்றினுடைய நீர்வளத்தை மதிப்பிடுதல்
கிணற்றின் நீர்வளம் குன்றாமை உறுதிப்படுத்தப்பட்டதும் இரண்டாம் கட்டமாக நீர்தாங்கியை அமைத்தல்
படிப்படியாக குழாய்கள், வாய்க்கால்கள் மூலம் கிராமத்து பயிர்ச்செய்கையை மேம்படுத்தல்

4. கல்வி:

பாலர்பாடசாலைக்கான அடிப்படை வசதிவளை மேம்படுத்தல்
மலசலகுடம், அடுக்களை, மின்சாரம், விளையாட்டு பூங்கா அமைத்தல்
பாடசாலை மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தல்
பாடசாலை மாணவர்களுக்கான பிரத்தியேக வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்தல்

5. மருத்துவம்:

அடிப்படை சுகாதார நிலையத்தை நிறுவுதல் 
படித்த இளைஞர், யுவதிகள் சிலரை முதலுதவி மற்றும் அடிப்படை மருத்துவ அறிவைப்புகட்டல்
தவணைமுறையில் மருத்துவர்கள் மயிலந்தனைக்குச் சென்று பணியாற்ற ஏற்பாடு செய்தல்
ஒரு நோயாளர் காவுவண்டி 2-3 அயற்கிராமங்களின் தேவைகளையும் பூர்த்தி செய்யுமாறும் நிலைகொள்ளல்

6. பொருளாதாரம்:

உற்பத்திப்பொருட்களை சந்தைப்படுத்த புதிய வாய்ப்புக்களை தொடர்ச்சியாக தேடல்
கிராமத்தின் வளங்களை அடிப்படையாகக் கொண்ட தொழிற்பயிற்சிகளை வழங்கல்
அயற்கிராமங்களுடன் இணைந்து நடுத்தர அளவிலான தொழிற்பேட்டைகளையும் வேலைவாய்ப்புக்களையும் ஏற்படுத்தல்                                                                                                                                                                                                                                                    

நீங்களும் திட்டங்களில் பங்காளராக விரும்புகின்றீர்களா
0007

Opening of Vahaneri Health Centre

The Health Care Center was opened by His Excellency Royal Norwegian Ambassador Thorbjørn Gaustadsæther on 20.03.19. The parents of the donor unveiled the board outside. The Royal Norwegian Ambassador cut the ribbon and opened the center officially. In his speech he welcomed, TNRA’s initiative to help the people in the Eastern part of Sri Lanka, especially villages like Vahaneri. முழுமையாக வாசிக்க ...
health center 01

நோர்வே தமிழரின் நிதியுதவியில் மட்டக்களப்பு வாகனேரியில் புதிய மருத்துவமனை!

மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவநிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக வாசிக்க ...
Hospital vahanri

வாகனேரி (மட்டக்களப்பு) மருத்துவநிலைய கட்டடப் பணிகள் துரிதம்

தமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் வாகனேரி (மட்டக்களப்பு) மருத்துவநிலைய கட்டடப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

முழுமையாக வாசிக்க ...
Hospital1

வாகனேரி கிராமத்திற்கான சுகாதார நிலையம், சிகிச்சை, பரிசோதனைப் பிரிவுடனான கட்டடத்தொகுதி அமைப்பு!

4000 குடும்பங்களை உள்ளடக்கிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் கஷ்டங்களை அனுபவித்து வந்தனர்.

முழுமையாக வாசிக்க ...
electricity 1

மயிலந்தனை கிராம அபிவிருத்திப்பணிகள் - பாலர் பாடசாலைக்கான மின்சார இணைப்பு

தமிழ்-நோர்வே வள ஒன்றியத்தின் மாதிரிக்கிராமத்திட்டத்தின் கீழ் மயிலந்தனை கிராம அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

முழுமையாக வாசிக்க ...