வறிய நிலையிலுள்ள மாணவர்களுக்கு நோர்வே தமிழர் உதவி

School1

வறுமை காரணமாக கல்வியைத் தொடரமுடியாமலிருக்கும் திறமையுள்ள மாணவர்கள் கல்வியைத் தொடர நோர்வேவாழ் தமிழ்க் குடும்பங்கள் நீண்டகாலமாக உதவிவருகின்றனர். பாடசாலை நிர்வாகத்தால் இனங்காணப்பட்ட மாணவர்களின் நிலமைகளை அஹிம்சா நிறுவனம் புலம்பெயர் உறவுகளின் கவனத்திற்கு கொண்டுவருகின்ற பொழுது முழுமனதுடன் தமது உதவிகளை வழங்க முன்வருவது நோர்வே தமிழர்களுக்குரிய தனிச்சிறப்பு.

இத்தகைய உதவிகள் சரியாக பயன்படுகின்றதா என அறிந்து கொள்ளவும், பரஸ்பர உரையாடலுக்கு களம் அமைக்கும் வகையிலும் மாணவர்களுடனும், அவர்களது பெற்றோர்/பாதுகாவலருடனும் மதியபோசனமும், கலந்துரையாடலும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மாணவர்களில் மூவர் வருகின்ற வருடங்களில் மருத்துவ பீடத்துக்கு நுழைய தகுதி பெறுவர் என பாடசாலை நிர்வாகம் எதிர்பார்க்கின்றது.

வர்த்தக மற்றும் கலைத்துறையில் பயிலும் மாணவர்கள் பல்கலைக்கழகம் புகுவதையும், உயர்பதவிகளை அடைவதையும் தமது இலட்சியமாக கொண்டுள்ளது மட்டுமல்லாது எதிர்காலத்தில் தாம் மக்கள் நலன்சார்ந்த செயற்பாட்டாளர்களாக இருப்பார்களென உறுதிவழங்கினர். 
கொட்டும் பனியிலும், அடைமழையிலும் கஷ்டப்பட்டு எம்மால் வழங்கப்படும் உதவிகள் மாணவர்களின் உன்னத இலட்சியம் நிறைவுபெற வழிசமைக்கும் என நாம் நிட்சயமாக நம்பலாம். 
மாணவர்கள், பெற்றோர்/பாதுகாவலர், அஹிம்சாவுடன் TNRA யும் உதவிசெய்யும் தமிழ்க் குடும்பங்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
 

நீங்களும் திட்டங்களில் பங்காளராக விரும்புகின்றீர்களா
0007

Opening of Vahaneri Health Centre

The Health Care Center was opened by His Excellency Royal Norwegian Ambassador Thorbjørn Gaustadsæther on 20.03.19. The parents of the donor unveiled the board outside. The Royal Norwegian Ambassador cut the ribbon and opened the center officially. In his speech he welcomed, TNRA’s initiative to help the people in the Eastern part of Sri Lanka, especially villages like Vahaneri. முழுமையாக வாசிக்க ...
health center 01

நோர்வே தமிழரின் நிதியுதவியில் மட்டக்களப்பு வாகனேரியில் புதிய மருத்துவமனை!

மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவநிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக வாசிக்க ...
Hospital vahanri

வாகனேரி (மட்டக்களப்பு) மருத்துவநிலைய கட்டடப் பணிகள் துரிதம்

தமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் வாகனேரி (மட்டக்களப்பு) மருத்துவநிலைய கட்டடப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

முழுமையாக வாசிக்க ...
Hospital1

வாகனேரி கிராமத்திற்கான சுகாதார நிலையம், சிகிச்சை, பரிசோதனைப் பிரிவுடனான கட்டடத்தொகுதி அமைப்பு!

4000 குடும்பங்களை உள்ளடக்கிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் கஷ்டங்களை அனுபவித்து வந்தனர்.

முழுமையாக வாசிக்க ...
electricity 1

மயிலந்தனை கிராம அபிவிருத்திப்பணிகள் - பாலர் பாடசாலைக்கான மின்சார இணைப்பு

தமிழ்-நோர்வே வள ஒன்றியத்தின் மாதிரிக்கிராமத்திட்டத்தின் கீழ் மயிலந்தனை கிராம அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

முழுமையாக வாசிக்க ...