பாரிசில் மருத்துவக்கருத்தரங்கு - Dr. லிமலநாதன்

helseParis1

வைகாசித் திங்கள் 20ம் நாள் (2018) பாரீஸ் மாநகரில் என் பள்ளித் தோழர்-தோழியருடன் ஒரு மகிழ்ச்சியான மீழிணைவு நிகழ்ந்து முடிந்தது. பாரீஸில் நடைபெற்ற ஒரு சர்வதேச இருதயசிகிச்சை கருத்தரங்கில் கலந்துகொள்வதற்காக எனது வைத்தியசாலையைப் பிரதிநிதித்துவப்படுத்தி நான்கு நாட்கள் அங்கு செல்லவேண்டியிருந்ததை நண்பர்கள் மனோவிடமும், இராதாவிடமும் தெரிவித்தபோது இந்தச் சந்தர்ப்பத்தில் மகாஜன பழைய மாணவர்களைச் சந்திப்பதோடு, ஒரு கன்னி முயற்சியாக ஒரு மருத்துவக் கருத்தரங்கையும் நடத்துவதென தீர்மானித்தோம்.


எனது சர்வதேசக்கருத்தரங்கு தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே பாரீஸ் சென்றடைந்தேன். விமானநிலையத்திலிருந்து நேரடியாக பழையமாணவர் சங்கக்கூட்டமும், மருத்துவக் கருத்தரங்கும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த மண்டத்திற்கு சென்றபோது மனோவும், நண்பன் கணேசலிங்கத்தின் தம்பியும் மண்டபவாயிலில் வரவேற்றனர். பழைய மாணவர் சங்கக்கூட்டம் 10:30 மணிக்கு ஆரம்பமாவதாய் அறிவித்திருந்த போதும் வழமையான தமிழ் நிகழ்வுகள் போல தாமதமாகவே ஆரம்பமாகியது. (இவ்விடத்தில் ஒன்றைக் குறிப்பிடலாம் என நினைக்கின்றேன், நோர்வேயில் குறிப்பாக ஒஸ்லோவில் நடைபெறுகின்ற நிகழ்வுகள் எல்லாம் குறித்தநேரத்துக்கு ஆரம்பமாகும் மரபு அண்மைக்காலங்களில் வளர்ந்து வருவதை அவதானிக்க முடிகின்றது). 


கூட்டம் தாமதமானதால் கிட்டத்தட்ட 36-37 வருடங்களுக்கு பின்பு சந்தித்த எம்முடன் படித்த மற்றும் எமக்கு முன்பும் பின்பும் படித்த பல நண்பர்களுடன் பேசவும், அன்பைப் பரிமாறவும் போதிய நேரம் கிடைத்தது. மோகன், நந்தன், சுதர்சன், யோகராஜா என எம்முடன் படித்த உருவம் மாறினாலும், நட்புணர்வு மாறாத பல நண்பர்களை இராதா அருகிருந்து அறிமுகம் செய்துகொண்டிருந்தார். 
அகவணக்கத்துடன் ஆரம்பமான பழைய மாணவர் சங்கக்கூட்டத்தில் அனைவரும் அக்கறையுடனும், சிரத்தையுடனும், பண்புடனும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். மனோ தலைமைப் பண்புடன் கூட்டத்தை நெறிப்படுத்திக் கொண்டிருந்தார். 


கூட்டத்தில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்ட போதும், காலத்தின் தேவையும், புலம்பெயர் சமூகத்தின் கடமையும் உணரப்பட்டு முன்னெடுக்கப்படுகின்ற மாணவர்களுக்கான ஊக்குவிப்புப் பணம் வழங்கல், மற்றும் கூட்டத்தில் வாசிக்கப்பட்ட சீனன்கலட்டி பாடசாலையின் ஒரு விண்ணப்பக் கடிதம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அந்தப் பாடசாலைக்கு உதவிவழங்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மகாஜனஅன்னையின் குழந்தைகள் தம் கடமையுணர்ந்து சகோதர கல்விக்கூடங்களிலும் அக்கறை கொள்வது பெருமிதம் கொள்ள வைத்தது. இவ்வாறான முன்னெடுப்புக்கள் பலருக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

சுவையான மதியபோனத்தைத் தொடர்ந்து ஆரம்பமானது மருத்துவக் கருத்தரங்கு.

இருதயநோயும், நீரழிவுநோயும் என்ற தலைப்பில் சிறிய விரிவுரையுடன் தொடர்ந்தது கலந்துரையாடல். ஒரு ஆரோக்கியமான கலந்துரையாடல் மூலமாக அனைவரும் பலன்பெறக்கூடிய பல விடயங்கள் பரிமாறப்பட்டது. ஒரு மருத்துவனாக அந்தப் பொழுதை பயனுள்ளதாக செலவிட்டதாக உணர்ந்து கொள்ள முடிந்தது. இது கன்னி முயற்சியாக இருந்த போதும், இவ்வாறான மருத்துவக் கருத்தரங்குகள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டால் பிரான்ஸ் வாழ் தமிழ் மக்கள் பயன்பெறுவர் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் பிரான்சில் உருவாகி வருகின்ற எமது இரண்டாம் தலைமுறையினரையும் இம்முயற்சிகளில் ஒன்றிணைத்து ஈடுபடுத்துவதன் மூலம் எம் சமூகம் நீண்டகால நோக்கில் நல்ல பலன்களை அறுவடை செய்யமுடியும் என நம்பலாம். 


இதனைத் தொடர்ந்து பாரீசின் புறநகர்ப் பகுதியான Sevran இல் 21 ம் திகதி மருத்துவக் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. இந்நிகழ்விலும் பலர் கலந்து கொண்டனர், நண்பனும், உறவினனுமான ஜஸ்ரின் இதனை திறம்பட நெறிப்படுத்தினார். 


22 ம் நாள் மாலை TRT வானொலியில் மருத்துவ நிகழ்ச்சியும், மருத்துவ ஆலோசனைகளும் நேரலை செய்யப்பட்டது. பேராசிரியர் சச்சிதானத்தமும் இணைந்து கொண்டு நிகழ்ச்சியைச் செழுமைப்படுத்தினார். நண்பன் தர்சன் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார்.
இவ்வாறான முயற்சிகளின் தொடர்ச்சி பாரீஸ் வாழ் தமிழ்மக்களுக்கு அவசியம் என்ற கருத்து பலரால் முன்வைக்கப்பட்டதுடன், சிலர் அதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை உடனடியாகவே ஆரம்பித்துள்ளதையும் அவதானிக்க முடிகின்றது. தமிழ்- நோர்வே வள ஒன்றியத்தின் நிர்வாக கூட்டத்தில் இதுபற்றி விரிவாக இன்று கலந்துரையாடப்பட்டது. எதிர்காலம் நல்ல பலன்களை பெற்றுத் தருமென நாம் நம்பலாம்.


மொத்தத்தில் நான் கலந்து கொள்ளச் சென்றிருந்த கருத்தரங்கும், எமது மகாஜன பழைய மாணவர்கள் ஒழுங்கு செய்திருந்த கருத்தரங்கு, Sevran இல் நடைபெற்ற கருத்தரங்கு, வானொலி நிகழ்வு என இந்த பாரீஸ் பயணத்தை மிகவும் அர்த்தமுள்ளதாக்கியதுடன் பல கற்பிதங்களையும் எனக்கு பெற்றுத் தந்தது என்றால் மிகையாகாது. 

- Dr. லிமலநாதன்

Gallery
helseParis2
helseParis2
நீங்களும் திட்டங்களில் பங்காளராக விரும்புகின்றீர்களா

மருத்துவக் கலாநிதி ச.விமலநாதன் வழங்குகின்ற கொரோனா வைரஸ் தொடர்பான மற்றுமோர் காணொளி.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான சூழலில் ஒருவருக்கு இருக்கக்கூடிய கேள்விகள், சந்தேகங்கள் குறித்த விளக்கங்களை வழங்குகின்றார்.

முழுமையாக வாசிக்க ...
0007

Opening of Vahaneri Health Centre

The Health Care Center was opened by His Excellency Royal Norwegian Ambassador Thorbjørn Gaustadsæther on 20.03.19. The parents of the donor unveiled the board outside. The Royal Norwegian Ambassador cut the ribbon and opened the center officially. In his speech he welcomed, TNRA’s initiative to help the people in the Eastern part of Sri Lanka, especially villages like Vahaneri. முழுமையாக வாசிக்க ...
health center 01

நோர்வே தமிழரின் நிதியுதவியில் மட்டக்களப்பு வாகனேரியில் புதிய மருத்துவமனை!

மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவநிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக வாசிக்க ...
Hospital vahanri

வாகனேரி (மட்டக்களப்பு) மருத்துவநிலைய கட்டடப் பணிகள் துரிதம்

தமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் வாகனேரி (மட்டக்களப்பு) மருத்துவநிலைய கட்டடப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

முழுமையாக வாசிக்க ...
Hospital1

வாகனேரி கிராமத்திற்கான சுகாதார நிலையம், சிகிச்சை, பரிசோதனைப் பிரிவுடனான கட்டடத்தொகுதி அமைப்பு!

4000 குடும்பங்களை உள்ளடக்கிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் கஷ்டங்களை அனுபவித்து வந்தனர்.

முழுமையாக வாசிக்க ...