TNRA மாதிரிக்கிராமத் திட்டத்தின் கீழ் மயிலந்தனை கிராம அபிவிருத்திப்பணிகள்

Mayilanthanai

தமிழ்-நோர்வே வள ஒன்றியத்தின் மாதிரிக்கிராமத்திட்டத்தின் கீழ் மயிலந்தனை கிராம அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

அந்தவகையில் குடிநீரும், பயிர்ச்செய்கைக்குமான நீர்வசதிகளின்றி அல்லலுற்ற மக்களின் முதன்மையான வேண்டுகோள் தமக்கு நீர்வசதிகள் பெற்றுத்தாருங்கள் என்பதாகவேயிருந்தது. TNRA ஒரு பொதுக்கிணறு அமைத்து அதில் நீரூற்றை உறுதிசெய்தபின் நீர்த்தாங்கியும் கூழாய்வலைப் பின்னலமைத்து இந்த எல்லைக் கிராம மக்களின் நீர்பிரச்சனையைத் தீர்ப்பதனூடு அவர்களின் இருப்பை உறுதிசெய்வதென தீர்மானித்து பாரிய நீர் வழங்கல் திட்டத்தைதீட்டியது. நோர்வே தமிழ்ச்சங்கம் 25,000 குரோணர்களை இத்திட்ட ஆரம்பவேலைகளுக்கென நன்கொடையாக வழங்கியிருந்தது.

மிகுந்த எதிர்பார்ப்புடனும், சவாலுடனும் கிணறு தோன்றும் வேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. நவீன உபகரணங்களுடன் பலமணிநேர உழைப்பினால் பாறைகள் பிழக்கப்பட 164 வெடிகள் தேவைப்பட்டன. 41 அடி ஆழமும், 15 அடி விட்டமுமான கிணற்றில் 16 அடி நீர் நிரம்பிவந்த போது மயிலந்தனைக் கிராம மக்களின் மனங்களும் பொங்கி ஆர்ப்பரித்ததை உணரமுடிந்தது. காலநிலை காரணமாக கட்டும்பணிகள் தாமதமாகின்ற போதும் இன்னும் ஒரு சில வாரங்களில் முதற்கட்டப்பணிகள் நிறைவுபெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

முதற்கட்ட பணிகள் நிறைவு செய்யப்பட்ட கிட்டத்தட்ட 35 இலட்சம் ரூபாய்கள் முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. மயிலந்தனைமக்கள் அடுத்த போகப்பயிர்ச்செய்கைக்கான கனவில் மூழ்கியுள்ளனர். TNRA யினராகிய நாமோ மயிலந்தனை மக்களின் வாழ்வை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவதற்கு எம்முடன் கைகோர்க்குமாறு புலம்பெயர் உறவுகளுக்கு நேசக்கரம் நீட்டுகின்றோம்.

Gallery
Mayilanthanai 1
Mayilanthanai 2
Mayilanthanai 3
Mayilanthanai 4
நீங்களும் திட்டங்களில் பங்காளராக விரும்புகின்றீர்களா

மருத்துவக் கலாநிதி ச.விமலநாதன் வழங்குகின்ற கொரோனா வைரஸ் தொடர்பான மற்றுமோர் காணொளி.

கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உள்ளான சூழலில் ஒருவருக்கு இருக்கக்கூடிய கேள்விகள், சந்தேகங்கள் குறித்த விளக்கங்களை வழங்குகின்றார்.

முழுமையாக வாசிக்க ...
0007

Opening of Vahaneri Health Centre

The Health Care Center was opened by His Excellency Royal Norwegian Ambassador Thorbjørn Gaustadsæther on 20.03.19. The parents of the donor unveiled the board outside. The Royal Norwegian Ambassador cut the ribbon and opened the center officially. In his speech he welcomed, TNRA’s initiative to help the people in the Eastern part of Sri Lanka, especially villages like Vahaneri. முழுமையாக வாசிக்க ...
health center 01

நோர்வே தமிழரின் நிதியுதவியில் மட்டக்களப்பு வாகனேரியில் புதிய மருத்துவமனை!

மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவநிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக வாசிக்க ...
Hospital vahanri

வாகனேரி (மட்டக்களப்பு) மருத்துவநிலைய கட்டடப் பணிகள் துரிதம்

தமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் வாகனேரி (மட்டக்களப்பு) மருத்துவநிலைய கட்டடப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

முழுமையாக வாசிக்க ...
Hospital1

வாகனேரி கிராமத்திற்கான சுகாதார நிலையம், சிகிச்சை, பரிசோதனைப் பிரிவுடனான கட்டடத்தொகுதி அமைப்பு!

4000 குடும்பங்களை உள்ளடக்கிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் கஷ்டங்களை அனுபவித்து வந்தனர்.

முழுமையாக வாசிக்க ...