வாகனேரி கிராமத்திற்கான சுகாதார நிலையம், சிகிச்சை, பரிசோதனைப் பிரிவுடனான கட்டடத்தொகுதி அமைப்பு!

Hospital1

4000 குடும்பங்களை உள்ளடக்கிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் கஷ்டங்களை அனுபவித்து வந்தனர். நிரந்தர கட்டிடவசதிகளற்ற நிலையில் நடமாடும் மருத்துவசேவை மூலம் மரநிழலிலும், கூடாரங்களிலும் அவர்களுக்கான மருத்துவதேவைகள் அவ்வப்போது வழங்கப்பட்டுவந்தது.

TNRA இக் கிராமத்து மக்களின் அவலங்களை அகிம்சா சமூக நிறுவனத்தின் உதவியுடன் வெளிக்கொணர்ந்தது. இக்கிராமத்து மக்களின் அவலங்களை தீர்க்கும் முகமாக ஆரம்ப சுகாதார நிலையம், சிகிச்சைப்பிரிவு, பரிசோதனைப் பிரிவு என பல்வேறு பாகங்களை உள்ளடக்கிய கட்டடத்தொகுதிக்கான அடிக்கல் இவ்வருட பங்குனி மாதம் நாட்டப்பட்டது. கட்டிட வேலைகள் துரிதகதியில் நடைபெற்று வருகின்றன.

அடுத்தவருட ஆரம்பத்தில் கட்டிடவேலைகள் நிறைவு பெற்று மக்கள் பயன்பெற ஆரம்பிப்பார்களென எதிர்பார்க்கின்றோம். புலம்பெயர்ந்து வாழும் மருத்துவதுறைசார் ஊழியர்கள், மாணவர்கள் இந்த மக்களுக்கு சேவை செய்யவிரும்புமிடத்து TNRA அதற்கான ஏற்பாடுகளைச் செய்துதர காத்திருக்கின்றது. ஜேர்மன், பிரான்ஸ், நோர்வே நாடுகளில் மருத்துவதுறைசார் எமது இரண்டாம் தலைமுறையினர் அடுத்த கோடைவிடுமுறையின் போது அங்கு பணிபுரிய தயாராகிவருகிறார்கள். இவ்வாறு சேவையாற்ற விரும்புவோர் எம்முடன் தொடர்புகொள்ளுமிடத்து அதற்கான ஒழுங்குகளைச் செய்து சேவையை சீரமைக்க இலகுவாக இருக்கும்.

நீங்களும் திட்டங்களில் பங்காளராக விரும்புகின்றீர்களா
0007

Opening of Vahaneri Health Centre

The Health Care Center was opened by His Excellency Royal Norwegian Ambassador Thorbjørn Gaustadsæther on 20.03.19. The parents of the donor unveiled the board outside. The Royal Norwegian Ambassador cut the ribbon and opened the center officially. In his speech he welcomed, TNRA’s initiative to help the people in the Eastern part of Sri Lanka, especially villages like Vahaneri. முழுமையாக வாசிக்க ...
health center 01

நோர்வே தமிழரின் நிதியுதவியில் மட்டக்களப்பு வாகனேரியில் புதிய மருத்துவமனை!

மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவநிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக வாசிக்க ...
Hospital vahanri

வாகனேரி (மட்டக்களப்பு) மருத்துவநிலைய கட்டடப் பணிகள் துரிதம்

தமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் வாகனேரி (மட்டக்களப்பு) மருத்துவநிலைய கட்டடப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

முழுமையாக வாசிக்க ...
Hospital1

வாகனேரி கிராமத்திற்கான சுகாதார நிலையம், சிகிச்சை, பரிசோதனைப் பிரிவுடனான கட்டடத்தொகுதி அமைப்பு!

4000 குடும்பங்களை உள்ளடக்கிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் கஷ்டங்களை அனுபவித்து வந்தனர்.

முழுமையாக வாசிக்க ...
electricity 1

மயிலந்தனை கிராம அபிவிருத்திப்பணிகள் - பாலர் பாடசாலைக்கான மின்சார இணைப்பு

தமிழ்-நோர்வே வள ஒன்றியத்தின் மாதிரிக்கிராமத்திட்டத்தின் கீழ் மயிலந்தனை கிராம அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

முழுமையாக வாசிக்க ...