நோர்வேஜிய வணிக நிறுவன வருட இறுதி ( stocktaking task) பொருட்கணக்கெடுப்பில் TNRA இளையோர் - தாயக மேம்பாட்டுக்கு பங்களிப்பு!

varetelling

இன்று மார்கழி மாதம், 2018 ம், ஆண்டின் இறுதி ஞாயிறு, 30.12.18, 25 தமிழ் இளைஞர்கள் அதிகாலையில் விழித்துக் கொண்டனர். வழமையாக இவ்வாறான விடுமுறைதினங்களில் மதியம் தாண்டியும் தூக்கம் கலைவது இளைஞர்களுக்கு கடினமானது. ஆனால், இன்று இவர்கள் விழித்துக் கொண்டனர், ஆம் TNRA யின் இளையோர் இன்று காலைமுதல் தமது உழைப்பை தாயக மக்களின் மேம்பாட்டிற்காக வழங்க முழுமனதுடன் அர்ப்பணித்துக் கொண்டனர்.

நோர்வேஜிய வணிக நிறுவன (Coop Obs) வருட இறுதி  ( stocktaking task) பொருட்கணக்கெடுப்பில் TNRA இளையோர் பங்கேற்று  தாயக மேம்பாட்டுக்கு பங்களித்துள்ளனர்.

50 ற்கும் மேற்பட்ட இளைஞர்கள் முன்வந்த பொழுதும், இவ்வாரம் 25 பேர் எமக்கு போதுமாகவிருந்ததனால், அனைவரையும் உள்வாங்க முடியவில்லை. அடுத்த வாரம் மிகுதிப்பேர் இணைத்துக் கொள்ளப்படுவார்கள். 


கடந்த வருடம் இவ்வாறாக சேர்த்த பணத்தினை மட்/மயிலம்பாவெளி ஶ்ரீ விக்னேஸ்வரா வித்தியாலயத்தியாலய மாணவர்களுக்கு வழங்கியதன் மூலம் அப்பாடசாலையின் விளையாட்டுத் துறையை முக்கியமாக உதைபந்தாட்டத்துறையை வளர்ப்பதற்கான சகல உபகரணங்களையும் வாங்கிக் கொடுத்தனர். இவ் இளைஞர்களின் நற்செயலுக்கு பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் அனைவரும் தமது நன்றிகளையும், பாராட்டுதல்களையும் தெரிவித்திருந்தனர்.


எமது இளைய தலைமுறையினர், தாயகம் தொடர்பான அக்கறை கொண்டவர்களாய் இல்லை என்பது, புலம்பெயர் சமூகத்தின் முதலாம் தலைமுறையினரால் பொதுவாக வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டு. எமது இளைஞோருக்கான தளங்களை அமைத்துக் கொடுத்து அவர்களுக்கான வெளியை வழங்குகின்ற போது நேர்மையுடனும், மனித நேயத்துடனும் அவர்கள் உழைக்கத்தயாராக இருப்பதை அவர்கள் நிரூபித்துள்ளார்கள். நல்லது, கெட்டதை பிரித்தறியும் ஆற்றல் அவர்களிடம் நிறையவே உண்டு, நாம் அவர்களிடம் கற்றுக் கொள்ளவும் நிறையவே உண்டு. 


இன்று பங்கெடுத்த அத்தனை இளைஞர், யுவதிகளுக்கும், அவர்களை எம் தாயக சிந்தனையுள்ளோராக வளர்த்தெடுத்த பெற்றோர்களுக்கும் நாம் தலைசாய்த்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

நீங்களும் திட்டங்களில் பங்காளராக விரும்புகின்றீர்களா
0007

Opening of Vahaneri Health Centre

The Health Care Center was opened by His Excellency Royal Norwegian Ambassador Thorbjørn Gaustadsæther on 20.03.19. The parents of the donor unveiled the board outside. The Royal Norwegian Ambassador cut the ribbon and opened the center officially. In his speech he welcomed, TNRA’s initiative to help the people in the Eastern part of Sri Lanka, especially villages like Vahaneri. முழுமையாக வாசிக்க ...
health center 01

நோர்வே தமிழரின் நிதியுதவியில் மட்டக்களப்பு வாகனேரியில் புதிய மருத்துவமனை!

மருத்துவ வசதிகள் இன்றி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் மட்டக்களப்பின் வாகனேரி கிராம மக்களின் அடிப்படை மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்குடன் மருத்துவநிலையம் ஒன்று பெரும் பொருட்செலவில் அமைக்கப்பட்டுள்ளது. முழுமையாக வாசிக்க ...
Hospital vahanri

வாகனேரி (மட்டக்களப்பு) மருத்துவநிலைய கட்டடப் பணிகள் துரிதம்

தமிழ் நோர்வே வள ஒன்றியத்தின் வாகனேரி (மட்டக்களப்பு) மருத்துவநிலைய கட்டடப் பணிகள் துரிதப்படுத்தப்பட்டு வருகின்றன.

முழுமையாக வாசிக்க ...
Hospital1

வாகனேரி கிராமத்திற்கான சுகாதார நிலையம், சிகிச்சை, பரிசோதனைப் பிரிவுடனான கட்டடத்தொகுதி அமைப்பு!

4000 குடும்பங்களை உள்ளடக்கிய வாகனேரி கிராம மக்கள் மருத்துவ வசதிகள் எதுவுமின்றி மிகவும் கஷ்டங்களை அனுபவித்து வந்தனர்.

முழுமையாக வாசிக்க ...
electricity 1

மயிலந்தனை கிராம அபிவிருத்திப்பணிகள் - பாலர் பாடசாலைக்கான மின்சார இணைப்பு

தமிழ்-நோர்வே வள ஒன்றியத்தின் மாதிரிக்கிராமத்திட்டத்தின் கீழ் மயிலந்தனை கிராம அபிவிருத்திப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவருகின்றன.

முழுமையாக வாசிக்க ...